திமுக அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

தமிழகம்

திமுக அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

திமுக அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996-2001 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு வழக்குத் தொடுத்தது.இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று(புதன்கிழமை) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், நரசிம்மா அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீதான வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave your comments here...