அண்ணா பல்கலை கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு – மாணவர்கள் கடும் எதிர்ப்பு!!

தமிழகம்

அண்ணா பல்கலை கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு – மாணவர்கள் கடும் எதிர்ப்பு!!

அண்ணா பல்கலை கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு –  மாணவர்கள் கடும் எதிர்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% அதிரடியாக உயர்ந்துள்ளது. இளநிலை பொறியியல் படிப்பு தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளநிலை செய்முறை சமர்ப்பிப்பு ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ரூ.900ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் நிலவியுள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் 50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave your comments here...