5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து துடிதுடிக்க கொன்ற வழக்கு – குற்றவாளி அசாஃபக் ஆலத்துக்கு தூக்கு தண்டனை!

இந்தியா

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து துடிதுடிக்க கொன்ற வழக்கு – குற்றவாளி அசாஃபக் ஆலத்துக்கு தூக்கு தண்டனை!

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து துடிதுடிக்க கொன்ற வழக்கு – குற்றவாளி அசாஃபக் ஆலத்துக்கு தூக்கு தண்டனை!

கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அலுவா அருகே உள்ள தைக்காட்டுக்காரா என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தம்பதி வசித்து வந்தனர். இவர்களது 5 வயது மகள் கடந்த ஜூலை 27 ஆம் தேதி மாதம் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமி குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இதனால் பதறிய பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரை தொடர்ந்து அப்பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்தினர் போலீசார். அப்போது தம்பதி குடியிருக்கும் வீட்டின் மேல் போர்ஷனில் வசித்து வந்த அசாஃபக் ஆலம் என்ற 28 வயது நபருடன் சிறுமியை பார்த்ததாக அங்குள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள சிலர் தகவல் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளும் அசாஃபக் ஆலம் சிறுமியை தூக்கி சென்றதை உறுதி செய்தன.

இதையடுத்து மார்க்கெட் அருகே உள்ள காலி இடத்தில் சாக்கு மூட்டையில் கட்டியப்படி சிறுமியின் சடலத்தை மீட்டனர் போலீசார். தொடர்ந்து அசாஃபக் ஆலமை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறி அதிர வைத்தான் அசாஃபக் ஆலம். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 5 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சிறுமியை உயிருடன் மீட்க முடியாமல் போனதால், மன்னித்துவிடு மகளே என கேரள காவல்துறை சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டது.

இதனால் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், காலம் தாழ்த்தாமல் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. அசாஃபக் ஆலம் ஏற்கனவே பீகாரில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கிய கேரள சிறுமி கொலை வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த போக்சோ நீதிமன்றம் கடந்த 4 ஆம் தேதி அசாஃபக் ஆலம்ம் குற்றவாளி என அறிவித்தது. மேலும் தண்டனை விவரம் 14 ஆம் தேதியான இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதனால் கொலையாளிக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி அசாஃபக் ஆலத்துக்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம் நடந்த 100 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு 110-வது நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave your comments here...