சிறு, குறு நிறுவனங்கள்… பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகம்

சிறு, குறு நிறுவனங்கள்… பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சிறு, குறு நிறுவனங்கள்… பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிப்பாதாக தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது இந்த கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருக்கிறது.

தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி மின்கட்டணத்தை உயர்த்தியது.இதில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் ரூ.550 ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டது. அதேபோல, பீக் அவர் கட்டணமும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரியம் உயர்த்தியுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.பீக்-அவர் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.எனினும் இது பெரும் சுமையாக இருப்பதால், இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அதுபோல், 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்கு பதிலாக 3-ஏ என்ற அட்டவணை மூலம் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும். வெல்டிங் இணைப்புகளை 3-பி என்ற சிறப்பு அட்டவணையில் இருந்து 3-ஏ அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொழில் பிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அப்போது உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இப்போது அதில் சில முக்கிய கோரிக்கையை ஏற்று பீக்-அவர்ஸ் கட்டணத்தை அரசு குறைத்து உள்ளது. மேலும் மின் பயன்பாட்டை பொறுத்து 15-ல் இருந்து 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து அரசாணையும் வெளியிட்டுள்ளது.சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க்கிங் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைப்பதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் 196.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...