பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி – மகாராஷ்டிரா அரசு முடிவு..!

இந்தியா

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி – மகாராஷ்டிரா அரசு முடிவு..!

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி – மகாராஷ்டிரா அரசு முடிவு..!

மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில், ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மகாராஷ்டிராவிலும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவானது வெளியில் தயார் செய்யப்பட்டு பின்னர், பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது.

மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்வதாக அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக குடிசைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுடன் சேர்த்து முட்டை, வாழைப்பழம் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கூறிய மகாராஷ்டிரா பள்ளி கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர், “வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவித்த முட்டை அல்லது முட்டை பிரியாணியை மாணவர்களுக்கு கொடுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்படும். மதிய உணவில் தினமும் இனிப்பு சேர்த்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பு

ரதச் சத்து அதிகமாகக் கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு சோயா பால் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சோயா பால் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...