சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்பு நவ.4 முதல் அமல் – போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..!

தமிழகம்

சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்பு நவ.4 முதல் அமல் – போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..!

சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்பு நவ.4 முதல் அமல்   – போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..!

சென்னையில், சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகனங்களுக்கான வேக வரம்பை நிர்ணயித்து போக்குவரத்து காவல்துறை நேற்று அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இலகு ரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கி.மீ வரை செல்லலாம் என்றும்,இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகம் 50 கி.மீ., ஆட்டோக்கள் அதிகபட்சம் 40 கி.மீ., வேகம் வரை செல்லலாம் என்றும் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சென்னையில் கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வேக வரம்பை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேக வரம்பை மீறி செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ரூ.1000 அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் வேக வரம்பை மீறினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது.

வேக வரம்பை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு ஏ.என்.பி.ஆர் கேமரா மூலம் அபராதம் செலுத்தப்படும்.

வரும் 4ம் தேதி முதல் வாகனங்கள் வேக வரம்பு அமல் படுத்தப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...