கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு – கேரளா விரையும் NSG, NIA குழு.!

இந்தியா

கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு – கேரளா விரையும் NSG, NIA குழு.!

கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு – கேரளா விரையும் NSG, NIA குழு.!

கேரள மாநிலம் கொச்சி நகரின் மையப்பகுதியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பெண் ஒருவர் பலியானார். 35 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் கொச்சி, களமசேரியில் உள்ள ஒரு அரங்கத்தில் யெகோவா கிறிஸ்தவ சபையின் 3 நாள் ஜெபக்கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று கடைசி நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை சுமார் 9 மணிக்கு ஜெபக்கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் காலை சுமார் 9.30 மணி அளவில் திடீரென அரங்கத்தின் உள்ள மேடைக்கு அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. மொத்தம் 3 முறை இந்த குண்டு வெடித்தது. இதனால் அரங்கத்தில் இருந்த நாற்காலிகள் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடத் தொடங்கினர்.

இந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். 35 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கொச்சி களமசேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்பட மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் புறப்பட்டு சென்றதை கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற கார் குறித்தும் அதில் சென்றவர்கள் யார் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எர்ணாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 8 பேர் தேசிய பாதுகாப்பு படை கேரளா விரைந்துள்ளது. இன்று மாலை கேரளா சென்றடைந்து விசாஒணை தொடங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேளர டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave your comments here...