5 நாட்களாக நீடித்த சோதனை -திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன்..!

தமிழகம்

5 நாட்களாக நீடித்த சோதனை -திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன்..!

5 நாட்களாக நீடித்த சோதனை -திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன்..!

5 நாட்களாக நீடித்த சோதனைக்குப் பின் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கி உள்ளனர். வரும் அக்.,14ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜெகத்ரட்சகன் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் தி.மு.க., – எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்கள்; சவீதா குழுமத்திற்கு சொந்தமான, 36 இடங்களில், வருமான வரித்துறையினர் 5 நாட்களாக சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.2.45 கோடி மதிப்பிலான 7 வெளிநாட்டு கைகடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன. சவீதா குழுமம் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.27 கோடி, 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மருமகன்கள் இளமாறன், நாராயணசாமி வீடு, ஆபீஸில் அதிகாரிகள் நடந்த சோதனையில் பல கோடி பணம், ஆவணங்கள் கிலோ கணக்கில் தங்கம் கிடைத்தன எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 5 நாட்களாக நீடித்த சோதனைக்குப் பின் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கி உள்ளனர். வரும் அக்.,14ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜெகத்ரட்சகன் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...