தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்… 2024 தேர்தலில் திமுக-பாஜக இடையேதான் போட்டி – அண்ணாமலை

அரசியல்

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்… 2024 தேர்தலில் திமுக-பாஜக இடையேதான் போட்டி – அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்… 2024 தேர்தலில் திமுக-பாஜக இடையேதான் போட்டி – அண்ணாமலை

வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., – பா.ஜ., இடையேதான் போட்டியாகத் தான் இருக்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: பா.ஜக., வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கான தேர்தலாக 2024 தேர்தல் இருக்கும். 2024 தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜக கூட்டணி உருவாக்கும். 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும். கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்களை கண்டு வருத்தமில்லை.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்தால் சரியாக இருக்காது. எந்த பாதையில் செல்ல வேண்டும் தெளிவாக இருக்கிறேன். 2024 தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால் குறை சொல்லுகிறோம். தேர்தல் முடிவுகள் பாஜக தேஜ கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும். தேஜ கூட்டணியில் சிலர் சேரலாம்.அதிமுக இல்லையென்று வருத்தப்படவும் இல்லை. சந்தோஷபடவும் இல்லை.

2024 ல் திமுக.,விற்கும் பாஜக.,விற்கும் தான் சவால் . மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக., திமுக.,விற்கு இடையே தான் போட்டி . என்டிஏ பாஜக வலிமையாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். 2024 தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி. திமுக, பாஜக.,வைத்தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சியில் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்

முன்னதாக சென்னையில் நடைபெற்ற பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-அடுத்த 7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக, பாஜக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும். பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும்.

அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது; தீவிரமாக உழைக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒன்றரை கோடி மகளிருக்கு வழங்கும் வகையில் விரிவுபடுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும்.

கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது அவர்களின் விருப்பம்; அதைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும் பாஜகவை வலிமையடைய செய்வதே என்னுடைய நோக்கம்.’என் மண் என் மக்கள்’ நடைபயண நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும். இவ்வாறு அவர் .

Leave your comments here...