பழனி முருகன் கோயிலில்… செல்போன், வீடியோ சாதனங்கள் கொண்டு செல்ல நாளை முதல் தடை..!

தமிழகம்

பழனி முருகன் கோயிலில்… செல்போன், வீடியோ சாதனங்கள் கொண்டு செல்ல நாளை முதல் தடை..!

பழனி முருகன் கோயிலில்…  செல்போன், வீடியோ சாதனங்கள் கொண்டு செல்ல நாளை முதல் தடை..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள்
அவ்வப்போது ஆகமவிதியை மீறி பழனி மலைக்கோயில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை படம்பிடித்து சமூகவலை தளங்களில் பரப்புவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பக்தர்கள் கவலை அடைகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவறையை செல்போனில் படம்பிடிக்க முயன்ற பெண் ஒருவரை பாதுகாப்பு ஊழியர் தடுத்து வெளியேற்றியதால், பெண்ணின் தந்தை திருக்கோவில் ஊழியர் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்நிலையில் பழனி கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்வது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 1ம்தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடைவிதித்து நடவடிக்கை எடுப்பதாக, மதுரை நீதிமன்ற கிளையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்கள், காமிராக்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் சாதனங்களை கொண்டு வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...