அரசுத் திட்டங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளால் ஊழல் குறைந்துள்ளது – பிரதமர் மோடி

இந்தியா

அரசுத் திட்டங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளால் ஊழல் குறைந்துள்ளது – பிரதமர் மோடி

அரசுத் திட்டங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளால் ஊழல் குறைந்துள்ளது – பிரதமர் மோடி

அரசுத் திட்டங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஊழல் மற்றும் சிக்கல்களை குறைத்து, வசதி மற்றும் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாக பணிகளில் சேரும் 51,000-க்கும் அதிமானவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் ரோஸ்கர் மேளாவில் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் அரசுத் துறைகளில் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து வலியுறுத்தினார். அப்போது பேசிய அவர் அரசுத்துறைகளில் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து வலியுறுத்தினார். மேலும் “அரசுத் திட்டங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஊழல் மற்றும் சிக்கல்களை குறைத்து, வசதி மற்றும் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்

குடிமக்களை முதலில் மனதில் வையுங்கள்: தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,” குடிமக்களே பிரதானம் என்ற குறிக்கோளுடன் பணியாற்றுங்கள். அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த, அவற்றின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள். இந்த அரசு, தொடர்ந்து கண்காணிப்பு, பணி முறை செயல்பாடு மற்றும் அரசுத் திட்டங்கள் 100 சதவீதம் உரியவர்களை சென்றடையும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

நாடு வரலாற்றுச் சாதனைகளை நிறைவேற்றுவதற்கான நேரம் இது, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாட்டின் 50 சதவீதம் இருக்கும் மக்களுக்கு புதிய ஊக்கம் அளிக்கும். கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இம்மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவுக்கான எண்ணம் உருவான போது இப்போது பணி நியமன ஆணை பெற்று பணியில் சேர இருப்பவர்கள் பிறந்திருக்கக் கூடமாட்டார்கள்.

புதிய இந்தியாவின் கனவு மிகப்பெரியது, விண்வெளி முதல் விளையாட்டுத்துறை வரை பெண்களின் பங்களிப்பு இப்போது அதிகரித்துள்ளது. பெண்கள் தற்போது ஆயுதப்படையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

Leave your comments here...