14 செய்தியாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி..!

அரசியல்

14 செய்தியாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி..!

14 செய்தியாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி..!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை வீழ்த்த சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டப்பின் இந்த குழு கூடியது. அடுத்தப்படியாக தொகுதி பங்கீடுதான் முக்கிய இலக்கு என தெரிவித்து இருந்தது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதோடு இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வரும் 14 செய்தியாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக இந்தியா கூட்டணியின் ஊடக பிரிவு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், அதிதி தியாகி, அமன் சோப்ரா, அமிஷ் தேவ்கன், ஆனந்த் நரசிம்மன், அர்ணாப் கோஸ்வாமி, சித்ரா திரிபாதி, கவுரவ் சவந்த், நவிகா குமார், பிராசி பரசஹர், ரூபிகா லியாகுவாட், ஷிவ் அரூர், சுதிர் சவுத்ரி மற்றும் சுஷாந்த் சின்ஹா என 14 செய்தி தொகுப்பாளர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்து இருக்கிறது.

Leave your comments here...