ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம்…இனி மறக்கவே முடியாது… இசைக் கச்சேரிய…? இல்லை வசூல் வேட்டையை…?- ரசிகர்கள் குமுறல்..!

தமிழகம்

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம்…இனி மறக்கவே முடியாது… இசைக் கச்சேரிய…? இல்லை வசூல் வேட்டையை…?- ரசிகர்கள் குமுறல்..!

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம்…இனி மறக்கவே முடியாது… இசைக் கச்சேரிய…? இல்லை வசூல் வேட்டையை…?- ரசிகர்கள் குமுறல்..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஆகஸ்ட் மாதம் நடந்திருக்க வேண்டிய ’மறக்குமா நெஞ்சம்’ எனும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி மழை காரணமாக, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பு ஒத்திவைக்கப்பட்டது. ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என ரஹ்மானே ட்விட் செய்ததால், அடுத்த நிகழ்ச்சியின் தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

செப்டம்பர் 10ம் தேதி அதே இடத்தில் நடத்தப்படும் என்றும் கச்சேரி திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிப்பு வந்தது. ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிக்கே எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் வரை டிக்கெட்கள் இணையத்தில் கிடைத்தது பல குளறுபடிகளை ஏற்படுத்தியது. மேலும், 2000, 5000 என செலவு செய்து வந்தவர்களிடம் கார்பார்க்கிங், பைக் பார்க்கிங் என தனித்தனியே கட்டணமும் வசூலிக்கப்பட்டது.அதாவது, இருபதாயிரம் பேர் அமரக்கூடிய இடத்தில் ஐம்பதாயிரம் பேர் இருந்ததாகவும் ரூ.50,000 டிக்கெட் வாங்கியவர்கள் இருக்கும் இடத்தில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு சரியில்லை. குடிக்க தண்ணீர் இல்லை, சரியான கார்பார்க்கிங் இல்லை இப்படியான ஒரு நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்திருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்..

இது ஒருபுறம் இருக்க மெயின் கேட் மட்டுமின்றி பல்வேறு பாதைகளைப் பயன்படுத்தி பலரும் உள்ளே நுழைந்துள்ளனர். இதனால் டிக்கெட் வாங்கியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கூட்டம் எல்லை மீற டிக்கெட் வாங்கியவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். விலை உயர்ந்த டிக்கெட்களை வாங்கியவர்களாலும் உள்ளே நுழைய முடியாதபடி கூட்டம் அளவுக்கு அதிகமானது. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபகாலங்களில் இப்படி ஒரு மோசமான நிகழ்ச்சி ஏற்பாட்டை பார்த்ததில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதனால், #ARRahmanConcert, #ARRahman போன்ற டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது


இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த குளறுபடி முழு பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை மக்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த அபாரமான வரவேற்பும், கட்டுக்கடங்காத கூட்டமும் எங்கள் நிகழ்ச்சியை பெரும் வெற்றியடையச் செய்துள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான முழு பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாமல் போனவர்களுக்கு டிக்கெட் தொகை திருப்பியளிக்கப்படுமா என்பது குறித்து அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக இந்நிகழ்ச்சி காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமான நிலையில், பல மக்களும் அவதிப்பட்டனர். இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் வாகனமும் சிக்கியது தொடர்பான வீடியோக்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார். அதாவது, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதில் , 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று குறிப்பட்டுள்ளது.ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரசிகர்கள் வந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் மாநகரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இந்த நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் வந்தார்களா? என்பது குறித்து விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, “அன்புள்ள சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். உங்கள் குறைகளை எங்கள் குழு விரைவில் நிவர்த்தி செய்யும் ” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...