இந்திய கடல்சார் உச்சி மாநாடு… 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க திட்டம் – மத்திய அமைச்சர் நம்பிக்கை..!

இந்தியா

இந்திய கடல்சார் உச்சி மாநாடு… 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க திட்டம் – மத்திய அமைச்சர் நம்பிக்கை..!

இந்திய கடல்சார்  உச்சி மாநாடு… 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க திட்டம் – மத்திய அமைச்சர் நம்பிக்கை..!

இந்திய கடல்சார் உச்சி மாநாட்டில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளதாக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார்.

இந்திய கடல்சார் 3வது உச்சி மாநாடு, வரும் அக்., 17 முதல் 19ம் தேதி வரை, டில்லியில் நடக்க உள்ளது. இந்த குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நேற்று நடந்தது.

இதில், மத்திய அமைச்சர் பேசியதாவது: சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி, துறைமுகங்கள் மூலமாக இருந்தாலும், உள்நாட்டு நீர்வழிகள் அல்லது கப்பல் மூலமாக நடந்தாலும், அது முதலீட்டாளர்களை ஈர்க்கும். கடல்சார் தொழிலுக்குத் தேவையான அனைத்து வகையான மனித வளங்களையும் ஈர்க்கும்.சில மாதங்களுக்கு முன், சென்னையில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா கப்பல் பயணம் தொடங்கப்பட்டது. சென்னை, சர்வதேச கப்பல் முனையத்தின் சக்தி. இவ்வாறு அவர் பேசினார்.

பின், அவர் அளித்த பேட்டி: சாகர்மாலா திட்டத்தின் கீழ், துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணியரை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, நாடு முழுதும் 804 திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் 106 திட்டங்களை, 1.4 லட்சம் கோடி ரூபாயில் செயல்படுத்தி வருகிறோம். இதில், 48 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு, துறைமுகங்களில் கட்டமைப்பு பணிகளுடன் நவீனமயமாக்கல், விரிவாக்கம் செய்தல், ரயில், சாலை போக்குவரத்து இணைப்பு போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை துறைமுகம், காமராஜர், வ.உ.சி., துறைமுகங்களை தொலைநோக்கு திட்டங்களோடு மேம்படுத்தி வருகிறோம். குஜராத் மாநிலம் கான்ட்லா, ஒடிசா மாநிலம் பாராதீப் மற்றும் துாத்துக்குடியில் ‘ஹைட்ரஜன் ஹப்’ எனப்படும் ட்ரஜன் எரிவாயு முனையங்கள், 1.5 லட்சம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. துாத்துக்குடி துறைமுகத்தில் மட்டும், 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் கோடி ரூபாயில், இந்த முனையத்தை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கான நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறோம். சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், துறைமுகங்களில் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...