அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசியல்

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயரிநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அதிமுகவில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 நாட்கள் நடைபெற்ற வாதங்கள் ஜூன் 15-ஆம் தேதி நிறைவடைந்தன.

இதனை அடுத்து கடந்த ஜூன் 28-ஆம் தேதி இருதரப்பினர் சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயரிநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தீர்மானங்கள் தடை விதிக்க முடியாது என்ற நீதிபதிகள், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து தீர்ப்பளித்தனர்.

Leave your comments here...