பஞ்சாப் : பாஜகவில் இணைந்த மேயர், துணை மேயர் என 46 காங்கிரஸ் கவுன்சிலர்கள்…!

அரசியல்

பஞ்சாப் : பாஜகவில் இணைந்த மேயர், துணை மேயர் என 46 காங்கிரஸ் கவுன்சிலர்கள்…!

பஞ்சாப் : பாஜகவில் இணைந்த மேயர், துணை மேயர் என  46 காங்கிரஸ் கவுன்சிலர்கள்…!

பஞ்சாப் பாஜக தலைவராக சுனில் ஜாக்கர் நியமிக்கப்பட்ட பின் அவர் கடந்த வியாழன் மாலை முதல்முறையாக சொந்த ஊர் அபோஹர் திரும்பினார். அப்போது அபோஹர் மேயர், துணை மேயர் மற்றும் 46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் உள்ள அபோஹர் சட்டப் பேரவை தொகுதி, காங்கிரஸ் கோட்டையாக இருந்தது வந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 10 முறை வென்றுள்ளது. இதில் 8 முறை சுனில் ஜாக்கர் குடும்பத்தினர் வென்றுள்ளனர்.

இந்நிலையில் சுனில் ஜாக்கர், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இப்பதவியை ஏற்றபின் அவர் முதல் முறையாக நேற்று சொந்த ஊர் அபோஹர் திரும்பினார். அப்போது அபோஹர் மேயர் விமல் தத்தாய், மூத்த துணை மேயர் கன்பத் ராம், துணை மேயர் ராஜ்குமார் நிரணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் 46 பேர் பாஜகவில் இணைந்தனர்.

அபோஹர் மாநகராட்சியில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. இதில் 49 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. கவுன்சிலர்கள் தவிர காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் தலை வர்கள், மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள், பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் என பலர் பாஜகவில் இணைந்தனர்.

இது குறித்து நேற்று பேட்டியளித்த சுனில் ஜாக்கர், ‘‘பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் பழைய மற்றும் புதிய தொண்டர்கள், தலைவர்களுடன் இணைந்து இந்த பொறுப்பை நிறைவேற்றுவேன். மாநிலத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுவேன். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளைப் போக்க பாடுபடுவேன்’’ என்றார்.

Leave your comments here...