அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

இந்தியா

அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மழைகால கூட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் வாய் திறக்க வேண்டும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியல் குறித்து தெலங்கானா பிஆர்எஸ் கட்சியின் எம்.பி. நாம நாகேஸ்வர் ராவ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டின் கடன் தொகை சுமார் 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறினார்.

மேலும் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் சிவசேனா கட்சி எம்பி தைர்யஷீல் சாம்பாஜிராவ் மானே வங்கிக்கடன் வசூல் அணுகுமுறை குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும், வாடிக்கையாளர்களிடம் கடன் வசூலில் ஈடுபடும்போது கடுமையான அணுகுமுறைகளைக் கையாளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave your comments here...