தேர்தல் பிரச்சாரம்: ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல்காந்தி : அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!

அரசியல்இந்தியா

தேர்தல் பிரச்சாரம்: ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல்காந்தி : அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!

தேர்தல் பிரச்சாரம்: ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல்காந்தி : அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!

இந்தியாவில் தயாரிப்போம் என்பதை தெரிவிக்கும் விதமாக மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இதை அப்படியே மாற்றி, தற்போது ரேப் இன் இந்தியாவாக உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். ராகுலின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையானது.

இது தொடர்பாக ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, பாராளுமன்றத்தில்  பாஜக, எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால், உயிரே போனாலும் தான் பேசியதற்காக தான் மன்னிப்புக் கேட்க போவதில்லை என ராகுல் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனையடுத்து ராகுல் மீது தேர்தல் கமிஷனிடம், பாஜக  சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்திருந்தார்.ஸ்மிருதி இரானியின் புகாரை ஏற்ற தேர்தல் கமிஷன், ரேப் இன் இந்தியா என தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது ஏன் என விளக்கம் அளிக்கும் படி ராகுலுக்கு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் விளக்கம் அளிக்க ராகுலுக்கு எத்தனை நாட்கள், தேர்தல் கமிஷன் கெடு அளித்துள்ளது என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தேர்தல் கமிஷன் கெடு

Leave your comments here...