திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் தரிசன டிக்கெட் 20ம் தேதி வெளியீடு..!

ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் தரிசன டிக்கெட் 20ம் தேதி வெளியீடு..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் தரிசன டிக்கெட் 20ம் தேதி வெளியீடு..!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட சேவைகளுக்காக குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படும் டிக்கெட்டிற்கான பதிவு இந்த மாதம் 18ம் தேதி, காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை அனுமதிக்கப்படும். அதன் பிறகு பதிவு செய்த பக்தர்களுக்கு எலெக்ட்ரானிக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பக்தர்களுக்கு இமெயில் மற்றும் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும்.

அதன்பிறகு ஆன்லைனில் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இதேபோல் அக்டோபர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்கள் இந்த மாதம் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட் இம்மாதம் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...