தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர சில்லறை விற்பனைக்கு ஏற்பாடு – மத்திய அரசு நடவடிக்கை..!

இந்தியா

தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர சில்லறை விற்பனைக்கு ஏற்பாடு – மத்திய அரசு நடவடிக்கை..!

தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர சில்லறை விற்பனைக்கு ஏற்பாடு – மத்திய அரசு நடவடிக்கை..!

நாட்டில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர முதன் முறையாக மத்திய அரசு தேசியத் தலைநகர் தில்லி மற்றும் முக்கிய நகரங்களில் குறைந்த விலையில் சில்லறை விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களின் மண்டிகளில் இருக்கும் தக்காளிகளை உடனடியாக கொள்முதல் செய்யுமாறு நாஃபெட் என்கிற தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தில்லி- தேசியத் தலைநகர் வலயம் (என்சிஆர்) பகுதிகளில் என்சிசிஎஃப் தனது சில்லறை வணிக மையங்கள், நடமாடும் வாகனங்கள், மதர் டைரி, கேந்திர்யா பந்தர் விற்பனையகங்கள் வழியாக இவ்வார இறுதிக்குள் (வெள்ளிக்கிழமை) விற்பனை தொடங்க இருக்கிறது. மற்ற நகரங்களில் நாஃபெட், என்சிசிஎஃப் நிறுவனங்கள் தங்கள் சில்லறை விற்பனையகங்கள் மற்றும் மற்ற உள்ளூர் விற்பனையகங்களுடன் இணைந்து உள்ளூர் சந்தையை விட ரூ.30 வரை குறைவாக தக்காளியை விற்கத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை வட்டாரங்களில் தெரிவித்தது வருமாறு:மத்திய நுகர்வோர்த் துறை வெங்காயத்தை விற்பனை செய்துள்ளது. தற்போது தக்காளியை முதன் முறையாக கொள்முதல் செய்து மத்திய அரசு விற்பனையைத் தொடங்கவுள்ளது. தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய நாஃபெட், என்சிசிஎஃப் ஆகிய நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது அகில இந்திய அளவில் சராசரியாக தக்காளி விலை கிலோ ரூ. 111.71ஆக உள்ளது. அதிகபட்ச விலையாக பஞ்சாப் பதிண்டாவில் கிலோ ரூ.203ஆகவும், நாட்டிலேயே குறைந்த விலையாக கர்நாடகம் பிதாரில் ஒரு கிலோ ரூ.34ஆகவும் உள்ளது.தில்லி, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் முறையே கிலோ ஒன்றுக்கு ரூ.150, ரூ.123, ரூ.137 என உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் தேசிய சராசரி அளவைவிட கூடுதலான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வரும் ஆகஸ்ட் வரை குறைந்த விலையில் விற்பதற்கு இந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தக்காளியை எல்லா மாநிலங்களும் உற்பத்தி செய்கின்றன. ஆனால், சுமார் 58 சதவீத உற்பத்தி தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்கள் பங்களிப்பை வழங்குகின்றன. இங்குள்ள மாநிலங்களில் பருவகாலத்தின் அடிப்படையில் உற்பத்தியாகும் தக்காளிகள் இதர சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அதிகபட்ச சாகுபடி டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும். தக்காளியைப் பொறுத்தவரை ஜூலை – ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் – நவம்பர் ஆகிய காலகட்டங்களில் பொதுவாக குறைந்த உற்பத்தியே காணப்படுகிறது.பருவமழை காலம் என்பதால் ஜூலை மாதத்தில் விநியோகம் சம்பந்தமான சவால்களும் உள்ளன. இதனால், விலை உயர்வு ஏற்படுகிறது.வரும் நாள்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக், ஔரங்காபாத், நாராண்கோன் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து விளையும் கூடுதல் தக்காளிகள் அனுப்பப்படவிருப்பதால் கூடிய விரைவில் தக்காளி விலை குறையும் எனத் தெரிவிக்கின்றனர்.

Leave your comments here...