சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகார் – திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

தமிழகம்

சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகார் – திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகார் – திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மட்டுமல்லாமல், சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கனல் கண்ணன்.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் மதபோதகரின் நடன வீடியோவை இவர் வெளியிட்டார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கனல் கண்ணன் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கனல் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...