பாடகி ஆசை : சிறுமியை பலாத்காரம் பிரபல யூ டியூபர் போக்சோ பிரிவில் கைது..!

இந்தியா

பாடகி ஆசை : சிறுமியை பலாத்காரம் பிரபல யூ டியூபர் போக்சோ பிரிவில் கைது..!

பாடகி ஆசை : சிறுமியை பலாத்காரம் பிரபல யூ டியூபர் போக்சோ பிரிவில் கைது..!

பாடகியாக மாற்றுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல யூ டியூபர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கூட்டிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜீமோன் (42). இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவரை நிறையபேர் பாலோ செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த ஒரு கண் பார்வை சற்று குறைந்த 17 வயதான சிறுமி ஒருவர் சமீபத்தில் தான் பாடிய சில பாடல்களை யூடியூபில் வெளியிட்டிருந்தார்.

இந்த பாடல்கள் ஜீமோனை கவர்ந்துவிட்டது. உடனடியாக ஜீமோன், அந்த சிறுமியை தொடர்புகொண்டார்.பின்னர் சிறுமியிடம் நன்கு பேசி பழகிய ஜீமோன் நீ பாடும் பாடல்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கித் தருவதாக சிறுமியிடம் கூறியுள்ளார். அதை அந்த சிறுமியும் நம்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுமியை போனில் அழைத்த ஜீமோன், கொச்சி செராயி பகுதியிலுள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தால் பாடல்களை பதிவு செய்யலாம், உன்னை பிரபல பாடகியாக மாற்றுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்படி அந்த சிறுமி ஜீமோன் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வைத்து அவர் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் போக்சோ பிரிவில் ஜீமோனை கைது செய்தனர்.

Leave your comments here...