வரும் 13 ஆம் தேதி சந்திரயான் – 3 திட்டமிட்டபடி விண்ணில் பாய்கிறது – ISRO தகவல்

இந்தியா

வரும் 13 ஆம் தேதி சந்திரயான் – 3 திட்டமிட்டபடி விண்ணில் பாய்கிறது – ISRO தகவல்

வரும் 13 ஆம் தேதி சந்திரயான் – 3  திட்டமிட்டபடி  விண்ணில் பாய்கிறது – ISRO  தகவல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை எல்விஎம் -3 ராக்கெட்டுடன் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை ட்விட்டரில் இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 13ம் தேதி அன்று சந்திரயான் – 3 விண்கலத்தை விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தெற்கு பகுதியை அடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது.

எனினும், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிட்டபடி ‘லேண்டர்’ கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ‘ஆர்பிட்டர்’, நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ரூ.615 கோடியில் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே, நிலவை ஆர்பிட்டர் சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. வடிவமைப்பு பணிகள், சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், எல்விஎம் -3 ராக்கெட் மூலமாக சந்திரயான்-3 விண்கலம் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 13ம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Leave your comments here...