பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார் – புதிய டி.ஜி.பி சங்கர் ஜிவால்…!

தமிழகம்

பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார் – புதிய டி.ஜி.பி சங்கர் ஜிவால்…!

பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார் – புதிய டி.ஜி.பி சங்கர் ஜிவால்…!

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வுபெற்ற நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

டி.ஜி.பி.யாக பதவியேற்றுக்கொண்டபோது, ‘ரவுடிகளுக்கு எதிரான, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். போலீசார் மற்றும் பொதுமக்களின் நலன் காக்க பல புதிய திட்டம் உள்ளது’ என்று சங்கர் ஜிவால் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கிடையில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள் மற்றும் போலீசாரின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) தினமும் காலை 11.30 மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் பெறுகிறேன். அலுவலகத்தின் பார்வையாளர்கள் அறையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை என்னிடம் அளிக்கலாம். குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று (புதன்கிழமை) முதல் அவரை பொதுமக்களும், போலீசாரும் சந்தித்து மனு கொடுக்கலாம் என்றும், 2 மாதத்துக்கு ஒருமுறை பொதுமக்களும், போலீசாரும் கொடுத்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...