கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாடுதான் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

அரசியல்

கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாடுதான் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாடுதான் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.

அவர் கூறியதாவது:- இப்போதெல்லாம் நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது. நல்லதை கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக, பலமுறை யோசித்து செய்ய வேண்டியுள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. தி.மு.க. என்பது குடும்ப இயக்கம் தான், தொண்டர்களை தம்பி என அழைத்தவர் அண்ணா.

தி.மு.க.விற்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் சொல்கிறார். பிரதமர் சொல்வது உண்மை தான், கருணாநிதி குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். தி.மு.க. மாநாடு நடத்தும்போதெல்லாம் குடும்பம் குடும்பமாக மாநாட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி தான் அழைப்போம். மாநாட்டிற்கு மட்டுமல்ல, போராட்டத்திற்கும் கூட குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து கலந்து கொள்வது தான் தி.மு.க.வின் போராட்டம்.

பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் ஏற்பட்ட அச்சத்தால் தான் பிரதமர் மோடி இறங்கிவந்து பேசுகிறார். இதுவரை பிரதமர் மணிப்பூர் பக்கம் செல்லாதது ஏன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட 50 நாட்களுக்குப் பிறகு நடத்துவது ஏன், என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறார்கள். ஒரு நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் பிரதமர் மோடி. மதப்பிரச்சனையை அதிகமாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் கருதுகிறார். நான் உறுதியோடு சொல்கிறேன். நிச்சயமாக வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். மத்தியில் சிறப்பான மதச்சார்பற்ற மாநில உரிமைகளை பெறக்கூடிய ஆட்சி அமைய தயாராக வேண்டும்” என தெரிவித்தார்.

Leave your comments here...