சென்னை, கோவை உள்ளிட்ட 6 இடங்களில் தொழில்பேட்டை : ஊரக பகுதிகளில் நிலையான வேலைவாய்ப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகம்

சென்னை, கோவை உள்ளிட்ட 6 இடங்களில் தொழில்பேட்டை : ஊரக பகுதிகளில் நிலையான வேலைவாய்ப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, கோவை உள்ளிட்ட 6 இடங்களில் தொழில்பேட்டை : ஊரக பகுதிகளில் நிலையான வேலைவாய்ப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந் தேதி கொண்டாடப்படும் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: சமூக நீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கருணாநிதியின் இரு கண்கள்.சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான தனி கொள்கையை உருவாக்கியவர் கருணாநிதி.சிறு, குறு நடுத்தர தொழில் துறையினருக்காக 4 தனி குழுமங்கள் அமைக்கப்படுகிறது.

ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்க சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அவசியம். திண்டிவனம், திருமுடிவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 6 தொழிற்பேட்டைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஊரக பகுதிகளில் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பெரும் குழுமங்கள் அமைக்கப்படும்.

சென்னை, கோவை உள்ளிட்ட 6 இடங்களில் தொழில்பேட்டை அமைக்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக, தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகினறன. மாணவர்களுக்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எம்.எஸ்.எம்.ஈ துறைக்காக ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கான விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...