மீண்டும் பிரதமராக மோடி வருவார் : எதிர்க்கட்சிகள் போட்டோ நிகழ்ச்சி நடத்துகின்றன – மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம்..!

அரசியல்

மீண்டும் பிரதமராக மோடி வருவார் : எதிர்க்கட்சிகள் போட்டோ நிகழ்ச்சி நடத்துகின்றன – மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம்..!

மீண்டும் பிரதமராக மோடி வருவார் : எதிர்க்கட்சிகள் போட்டோ  நிகழ்ச்சி நடத்துகின்றன – மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம்..!

பாட்னாவில் ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளை புகைப்படக் காட்சிக்காக ஒன்றுகூடியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார்.

பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார். ஜம்முவுக்கு விமானம் மூலம் வந்தடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் ஆகியோர் வரவேற்றனர்

பின்னர் ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா: எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்த்து நிற்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 2024இல் பிரதமர் மோடி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப் பெற்று மீண்டும் பிரதமராக வருவார். “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. தற்போது நரேந்திர மோடி அரசு ஊழலுக்கு எதிரான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரை மூன்று குடும்பங்கள்தான் பலண்டுகளாக ஆட்சி செய்து வந்தன. சட்டப்பிரிவு 370 காரணமாக ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி ஏற்படவில்லை. அதோடு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு 42 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இத்தனை பேர் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு? தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா பொறுப்பேற்பாரா? மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி பொறுப்பேற்பாரா? ஆனால், அவர்கள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டிருக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். நரேந்திர மோடி ஆட்சியில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமித் ஷா உரையாற்றினார்.

Leave your comments here...