கோலாகலமாக தொடங்கிய பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை…!

ஆன்மிகம்

கோலாகலமாக தொடங்கிய பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை…!

கோலாகலமாக தொடங்கிய பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை…!

ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம் பூரி. இங்குள்ள ஜெகநாதர் கோவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ரத யாத்திரையை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் அவரின் சகோதரர் ஜெகநாதர், சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் இந்த தேரில் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ெஜகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள வண்ணமயமான ரத ராத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது.

உலகப்பிரசத்தி பெற்ற பூரி நகரில் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது. 10 நாட்கள் இந்த திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகன்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குண்டிச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பின்னர் ஜெகன்நாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவடைய உள்ளது.

இந்த ரத யாத்திரை நாளில் ஒவ்வொரு ஆண்டும் உடன்பிறப்புகள், ஜெகன்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகியோர் தனித்தனியாக மூன்று ரதங்களில், பூரி நகரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு வேண்டிய வரம் அள்ளி தருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஓடிசா மாநிலத்தில் தற்போது வெயில் கடுமையாக உள்ளது. அனல் காற்று வீசும் நிலையிலும் ரத யாத்திரையை காண மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வெயிலின் கடுமையை கட்டுப்படுத்தும் வகையில் ரத யாத்திரை நடைபெறும் போது பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave your comments here...