திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது தொடர்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு..!

அரசியல்

திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது தொடர்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு..!

திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது தொடர்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு..!

திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா? என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த வாசுதேவனூர் பேருந்து நிறுத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடிக் கம்பம் நட்டுள்ளனர். இதைக் கண்ட கிராம நிர்வாக அலுவலர், கட்சிக் கொடிக் கம்பவம் அகற்றுவது குறித்து சின்னசேலம் வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வட்டாட்சியர் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீஸார் கொடிக்கம்பத்தை அகற்றச் சென்றபோது, அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தனபால், கொடிக் கம்பத்தை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்ததோடு, வட்டாட்சியர் இந்திராவை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் அனைத்தும் காவல் துறையினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது.இதனால் அங்கிருந்து சென்று வட்டாட்சியர் இந்திரா, தனபால் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் இந்திராவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட பெண் வட்டாட்சியரை, காவல்துறை முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது?


திறனற்ற திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா?உடனடியாக, பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave your comments here...