தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகம்

தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முருகானந்தம், முதல்வரின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்ற விவரம்:* ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்ற்றம் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்.

* சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த ககன் தீப்சிங்பேடி சுகாதாரத்துறை செயலாளராக நியமனம்
* கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமனம்
* சுகாதாரத்துறை செயலாளராக இருந்த டாக்டர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயலராக நியமனம்
* போக்குவரத்துத்துறை செயலர் கோபால், கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீரமைப்பு கமிஷனராக நியமனம்
* இந்து சமய அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், பொதுப்பணித்துறை செயலராக நியமனம்
* பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை செயலராக நியமனம்.
*கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக டி. ஜெகன்நாதன் நியமனம்
*பனீந்தர்ரெட்டி போக்குவரத்து துறை செயலாளராக நியமனம்.

Leave your comments here...