குமாரகோவில் முருகன்கோவில் காவடிகட்டு: பக்தா்கள் விரதம் இருந்து வேல் குத்தி நேர்த்திக்கடன்.!

ஆன்மிகம்

குமாரகோவில் முருகன்கோவில் காவடிகட்டு: பக்தா்கள் விரதம் இருந்து வேல் குத்தி நேர்த்திக்கடன்.!

குமாரகோவில் முருகன்கோவில் காவடிகட்டு:  பக்தா்கள் விரதம் இருந்து வேல் குத்தி நேர்த்திக்கடன்.!

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில் வேளிமலை குமாரசுவாமி கோயில் ஆகும். குமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ காவல்துறை சார்பிலும், மழை வளம் பெருகி விவசாயம் சிறக்க பொதுப்பணித்துறை சார்பிலும் குமாரகோவில் முருகனை வேண்டியும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்து கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தக்கலை போலீஸ் நிலையம் , பொதுப்பணித் துறை சார்பாக காவடி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அது போல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று குமாரகோவிலுக்கு காவடி ஊர்வலம் நடந்தது.

இதில் தக்கலை போலீஸ் நிலையம் சார்பில் யானைகள் மீது பால்குடமும், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மேளதாளங்கள் முழங்க பவனியாக குமார கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.


இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பத்மநாபபுரம், புலியூா்குறிச்சி, பிரம்மபுரம், தென்கரை, குமாரகோவில், முத்தலகுறிச்சி, ஆழ்வாா்கோயில், தக்கலை பாரதி நகா், செருப்பாலூா், குலசேகரம், முட்டைக்காடு ஆசான்கிணறு, மைலோடு, வெட்டி கோணம், இரணில் கோணம், மருதங்கோடு உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட ஊா்களில் இருந்து புஷ்பகாவடி, வேல்காவடி, பறவை காவடிகள், சூரியகாவடி உள்பட 100-க்கும் மேற்பட்ட பல்வேறு காவடிகளை பக்தா்கள் விரதம் இருந்து எடுத்து வந்து வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு வந்தனா். அங்கு அவா்கள் கொண்டு வந்த அபிஷேக பொருள்களான பன்னீா், தேன், களபம், சந்தனம், விபூதி, தயிா், பால், மற்றும் பஞ்சாமிா்தம் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காவடி விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

Leave your comments here...