வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக 10 லட்சம் மோசடி – போலி என்ஐஏ அதிகாரி கைது

தமிழகம்

வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக 10 லட்சம் மோசடி – போலி என்ஐஏ அதிகாரி கைது

வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக 10 லட்சம் மோசடி – போலி என்ஐஏ அதிகாரி கைது

சென்னையில் வங்கியில் கடன் பெற்று தருவதாகக் கூறி 10 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்த போலி என்ஐஏ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராமாபுரம் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவர் பெயின்டிங் கான்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு தனது நண்பர் மூலம் கேகே நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலாஜி(60) மற்றும் அவரது மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அப்போது பாலாஜி, தான் பொருளாதார குற்றபிரிவில்(EOW) துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருவதாக அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அத்துடன் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பலரை தெரியும் என கூறி நம்ப வைத்துள்ளார்.

இதனை நம்பி விஜயகுமார் தனது தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் பெற்று தருமாறு பாலாஜியிடம் கேட்டுள்ளார். அதற்கு தனக்கு சில வங்கி அதிகாரிகள் தெரியும் என்றும், கடன் வாங்க பணம் செலவாகும் என பாலாஜி கூறியுள்ளார்.

இதற்கு ஒப்புதல் தெரிவித்து விஜயகுமார் கடந்த 2016 முதல் 2022-ம் ஆண்டு ஆண்டு வரை சிறுக சிறுக 10லட்சம் ரூபாயை பாலாஜிக்கு கொடுத்துள்ளார். இந்த பணத்தைப் பெற்று கொண்ட பாலாஜி. குறிப்பிட்டது போல் எந்த லோனும் வாங்கி தராமால் இழுத்தடித்து ஏமாற்றி வந்தார்.

இதற்கிடையே பாலாஜி தனக்கு என்ஐஏ வில் பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஆகையால் சில தினங்களில் டெல்லி சென்று பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பதறிப் போன விஜயகுமார், பாலாஜி டெல்லி சென்று விட்டால் கொடுத்த பணம் கிடைக்காது என்று எண்ணி 10 லட்சம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தைத் திருப்பி தரமுடியாது, உன்னை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன் என பாலாஜி மிரட்டியுள்ளார். இதுகுறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.

இதன் பேரில், போலீஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் அலுவலகத்தில் இருந்து புகார் மனு ராமாபுரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராமாபுரம் போலீஸார், விஜயகுமார் புகாரின் பேரில் விசாரணை நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட போலி என்ஐஏ அதிகாரி பாலாஜியை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து போலி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி அடையாள அட்டையை பறிமுதல் செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave your comments here...