கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றேனா..? காங்கிரஸ் புகாருக்கு அண்ணாமலை மறுப்பு…!

தமிழகம்

கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றேனா..? காங்கிரஸ் புகாருக்கு அண்ணாமலை மறுப்பு…!

கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றேனா..? காங்கிரஸ் புகாருக்கு அண்ணாமலை மறுப்பு…!

கர்நாடக தேர்தலுக்காக ஹெலிகாப்டரில் பண மூட்டைகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு வினய் குமார் விரக்தியின் உச்சத்தில் இருப்பதால் இவ்வாறு விமர்ச்சிக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 86 தொகுதிகளின் பொறுப்பு தமிழக பாஜக தலைவரும்; கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்தொகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் ஓட்டுகளை வளைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை கர்நாடகாவில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார்.

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்ததாக உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அவர் ‛ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து இருக்கிறேன். தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

சோதனை : இதனிடையே, அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில், தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில்: ‛ நான் சாமானியன். எங்களது கொள்கை வேறு. அவர்களது கொள்கை வேறு. கால விரயத்தை குறைப்பதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் பயண நேரத்தை குறைக்க ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறோம்.எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். வினய் குமார் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...