அமர்நாத் புனித யாத்திரை – ஜூலை 1-ல் தொடக்கம்!

இந்தியா

அமர்நாத் புனித யாத்திரை – ஜூலை 1-ல் தொடக்கம்!

அமர்நாத் புனித யாத்திரை – ஜூலை 1-ல் தொடக்கம்!

தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை குறித்த ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் 44-வது ஆலோசனை கூட்டம், மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ராஜ்பவனில் நேற்று நடந்தது. இதில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை புனித யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறும்போது, ‘‘சுமுகமான அமர்நாத் யாத்திரைக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறியுள்ளனர். இந்த யாத்திரையில் மிகச் சிறந்த சுகாதார வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகளை பக்தர்கள் பெறுவார்கள்’’ என்றார்.

அமர்நாத் யாத்திரை அமர்நாத் குடைவரைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன. இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும்[2], ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும். இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாகும்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையானது அனந்தநாக் மாவட்டம் பாஹல்கம் வழியாகவும், கண்டர்பால் மாவட்டம் பல்டால் வழியாகவும் ஒரே நேரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. யாத்ரீகர்கள் வசதிக்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் ஸ்ரீ அமர்நாத் யாத்திரை ஆப் நிறுவப்பட்டுள்ளது. அதில் யாத்திரை பதிவு தொடங்கி அத்தனை விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர காலநிலை, பக்தர்கள் பயண சேவை விவரங்கள் என அனைத்தும் ரியல் டைம் தகவலாக கொடுக்கப்பட்டுள்ளன.

அமர்நாத் யாத்திரை தொடங்கிவிட்டால் பாதுகாப்பு படையினர் ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்படுவது வழக்கம். காஷ்மீரின் தென்பகுதிகளான பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம் நிறைந்த குல்காம், சோபியான், புல்வாமா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்படுவர். ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

Leave your comments here...