திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியல் : ரஃபேல் வாட்சின் பில் – வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.!

அரசியல்தமிழகம்

திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியல் : ரஃபேல் வாட்சின் பில் – வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.!

திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியல் : ரஃபேல் வாட்சின் பில் – வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவர பட்டியலையும், வெளியிட்டார்.

இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. எல்லோரும் பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 21ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.

வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு: வீடியோவில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் என சில தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெகத்ரட்சகன் – ரூ.50 ஆயிரத்து ,219.37 கோடி
எ.வ.வேலு – ரூ.5,442.39 கோடி
கே.என்.நேரு – ரூ.2,495.14 கோடி
கனிமொழி- ரூ.830.33 கோடி
கலாநிதிமாறன் – ரூ.12,450 கோடி
டிஆர் பாலு – ரூ.10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் – ரூ.579.58 கோடி
கலாநிதி வீராசாமி – ரூ.2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி – ரூ.581.20 கோடி
திமுக கட்சியின் சொத்து மதிப்பு – ரூ.1,408.94 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி
உதயநிதி – ரூ.2,039 கோடி
சபரீசன் – ரூ.902.46 கோடி
ஜி ஸ்கொயர் வருமானம் – ரூ.38,827.70 கோடி
மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி)

மேலும் அண்ணாமலை கூறியதாவது:-ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும். ஒரு கட்சிக்கு எதிராக மட்டும் நான் சொல்லவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் 2024ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும். ஊழலை எதிர்க்க வேண்டும் எனில் மொத்தமாக தான் எதிர்ப்போம். தலைவனாக இருக்கும் வரை இப்படி தான் செயல்படுவேன். அதை செய்யக்கூடாது எனில் தைரியம், திராணி இருந்தால் டில்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். ஏனெனில் இது பிரதமர் மோடி விரும்பக்கூடிய அரசியல்.

எந்த தயவிலும் நான் எம்.பி., ஆக வேண்டிய அவசியம் இல்லை. 10 தேர்தலில் தோற்றாலும் இங்கு தான் இருப்பேன்.சி.பி.ஐ.,யிடம் செல்கிறோம் அடுத்த பாகம் நீங்கள் நினைத்து பார்க்காத வகையில் இருக்கும். பினாமி சொத்து போன்றவற்றை அதில் பார்க்கலாம். ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட், ஜல்லிக்கட்டு என அனைத்திலும் கையெழுத்து போட்டது திமுக.என்னிடம் நிறைய பட்டியல் இருக்கிறது. முதல் பட்டியல் முதல்வர் பற்றி நேரடியாக இருக்க வேண்டும் என வெளியிட்டுள்ளேன். அடுத்தடுத்து அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் வெளியிடுவேன். இன்னும் 3 பட்டியலை வெளியிட உள்ளேன் என கூறினார்.

ரபேல் வாட்சை தகவலை வெளியிட்ட அண்ணாமலை முதல் தலைமுறை அரசியல்வாதி ஆக உள்ளதால் மாதம் ரூ. 8 லட்ச செலவாகிறது. அதனை கூட என்னால் சமாளிக்க முடியவில்லை. என் வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம் ஆகியவற்றை நண்பர்கள் தான் தருகின்றனர். போலீஸ் பணியில் இருந்த போது லஞ்சப்பணத்தில் ரபேல் வாட்ச்சை வாங்கியதாக தி.மு.க.,வினர் அவதூறு பரப்புகின்றனர். என்றார்.தொடர்ந்து, ரபேல் வாட்ச்சை வாங்கியதற்கான ஒரிஜினல் ‘பில்’ ஐ வெளியிட்டு தொடர்ந்து அண்ணாமலை கூறியதாவது: உலகளவில் 500 ரபேல் வாட்ச்சுகள் விற்பனை ஆகியுள்ளன. அதில், 147வது வாட்ச் என்னிடம் உள்ளது. இந்த வாட்ச்சை, கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து 3 லட்ச ரூபாய்க்கு வாங்கினேன்.

இந்தியாவில் 2 வாட்ச் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. ஒன்று மும்பையை சேர்ந்தவர் வாங்கினார். மற்றொன்றை கோவையை சேர்ந்த ஜிம்சன் என்று நிறுவனம் வாங்கியது. இந்த வாட்சை 2021 மார்ச் மாதம், சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கி, மே மாதம் என்னிடம் கொடுத்தார். இதற்கான ஒரிஜினல் ‘பில்’ என்னிடம் உள்ளது.ஒரே வாட்ச்சை இரண்டு ஆண்டுகளாக கட்டி கொண்டு உள்ளேன். 2021 முதல் எனது கையில் இருக்கும் ஒரே வாட்ச் இதுதான். நான் காவல் பணியில் இருந்த போது லஞ்சமாக, ரபேல் வாட்சை வாங்கவில்லை. எனது வங்கிக்கணக்கு, சம்பளம் என அனைத்து விவரங்களையும் வெளியிட உள்ளேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave your comments here...