இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தாவில் சோதனை ஓட்டம்..!

இந்தியா

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தாவில் சோதனை ஓட்டம்..!

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தாவில் சோதனை ஓட்டம்..!

நாட்டிலேயே முதல் முறையாக, ஆற்றுக்கு கீழ் செல்லும், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், 1984ம் ஆண்டில் இருந்து, மெட்ரோ ரயில் சேவை அமலில் உள்ளது. நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை, இங்கு தான் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து எஸ்பிளனேட் ரயில் நிலையம் வரை, இன்று (ஏப்.,12)ம் தேதி, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது.

இது குறித்து, கொல்கத்தா மெட்ரோ ரயில், நிர்வாக இயக்குனர், பி. உதய்குமார் ரெட்டி கூறியுள்ளதாவது:நாட்டிலேயே முதல் முறையாக, ஹூக்ளி ஆற்றின் கீழ், 33 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள, சுரங்க ரயில் நிலையம் வழியாக, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது ; இது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.

இந்த ரயில் நிலையத்தில், மீதமுள்ள பாதைகளை முடித்து, சேவைகளை துவங்க, ஏழு மாதங்களாகும். இந்தாண்டுக்குள், ரயில் சேவை தொடங்கும் என, எதிர்பார்க்கிறோம். ரயில் சேவை தொடங்கினால், ஆற்றின் கீழ் செல்லும், 520 மீட்டர் துாரத்தை, 45 வினாடிகளில் ரயில் கடக்கும் எனவும், கணிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள, ஹவுரா மைதானம் மற்றும் செக்டர்- 5ஐ இணைக்கும், கிழக்கு – மேற்கு மெட்ரோ ரயில் பாதையின், ஒரு பகுதியாக, இந்த ரயில் பாதையின் நீட்சிப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் வடக்கு – தெற்கு பாதை, எஸ்பிளனேட் ரயில் நிலையத்தை, ஹவுரா மற்றும் சீல்டா ரயில் நிலையங்களுடன் இணைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...