ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழகம்

ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க கவர்னருக்கு, ஜனாதிபதியும், மத்திய அரசும் அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தில் முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் , கவர்னர் மீது தாக்குதல் கணைகளை தொடுத்தார். அரசியல்வாதியாக பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக பேசுகிறார் என குற்றம் சாட்டினார்.தமிழக சட்டசபையில், ஆன்லைன் ரம்மிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில், ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர். அவையில் 146 பேர் இருந்த நிலையில், 144 பேர் ஆதரவு கொடுத்தனர். 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த தீர்மானத்தை முன்மொழித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு.மக்கள் நலனுக்கு கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் வருத்தம் ஏற்படுகிறது. நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்ற போதும், பதவிக்கான மரியாதையை கொடுக்க தவறவில்லை. மக்களுக்கும் அரசுக்கும் வழிகாட்டியாக, நண்பராக கவர்னர் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அரசியல் கட்சி கண்ணோட்டத்தில் செயல்பட்டு வருகிறார். கவர்னர் என்ற நிலையை தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார்.

தமிழக அரசுக்கு எதிராக பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளார். கவர்னர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும்.சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கவர்னர் என்ற நிலை மாறி அரசியல்வாதியாக கவர்னர் பேசுகிறார். தமிழக மக்களின் நலனுக்கு குறுக்கே நிற்கிறார். மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார். சட்டசபையை அவமதிக்கிறார். வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக உள்ளார். ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றி வருகிறார். கவர்னரின் தனிப்பட்ட செயல்பாடுகளை தான் விமர்சிக்கிறோம்

கவர்னர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்ல சட்டசபையை அரசியல்மன்றமாக மாற்ற விரும்பவில்லை. சட்டசபைக்கு அரசியல்நோக்கத்தோடு இடைஞ்சல் கொடுக்க நினைத்தால், வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். கவர்னர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலக்கெடு வழங்க ஜனாதிபதி, மத்திய அரசுயை வலியுறுத்துவது என்றும், சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உரிய அறிவுரைகளை, ஜனாதிபதியும் , மத்திய அரசும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.தொடர்ந்து, இந்த தீர்மானத்தை ஆதரித்து திமுக கூட்டணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பேசினர் .

Leave your comments here...