பிரதமர் மோடி சென்னை வருகை – 5 அடுக்கு பாதுகாப்பு, 22,000 போலீஸார்!

இந்தியாதமிழகம்

பிரதமர் மோடி சென்னை வருகை – 5 அடுக்கு பாதுகாப்பு, 22,000 போலீஸார்!

பிரதமர் மோடி சென்னை வருகை –  5 அடுக்கு பாதுகாப்பு, 22,000 போலீஸார்!

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி சென்னை வருவதையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 22,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆளுநர் மளிகை அடையாறு கடற்படைத் தலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யவுள்ளார்கள். கண்காணிப்பு வளையத்தில் தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவைகளில் பலத்த சோதனை ஏற்படுத்தியுள்ளனர். சென்னை பெருநகர கால் எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வதற்காக தமிழகம் வருகைதரருகிறார். அவர் வரவேற்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐந்தடுப்பு பாதுகாப்புகளை தமிநாடு காவல்துறை ஏற்பாடு செய்துருக்கிறது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

அதன் பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையும் பிரதமர் மோடி துவங்கிவைக்கிறார். அதன் பிறகு விவேகாந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழிச்சியில் பங்கேற்ற பிறகு பல்லாவரத்தில் இருக்கக்கூடிய மைதானத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிகள் நாட்டவிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி எல்லாம் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 8ம் தேதி மாலை இங்கு தமிழகம் வருகை தரவிருக்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விவேகானந்தர் இல்லம் அதே போல பல்லாவரம் உள்ளிட்ட செல்லும் இடமெல்லாம் ஐந்தடுக்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். சென்னையில் ஒட்டுமொத்தமாக 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave your comments here...