நான் முஸ்லிம் என்பதால் பாஜக அரசு வழங்காது – பிரதமர் மோடிக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் புகழாரம்..!

இந்தியா

நான் முஸ்லிம் என்பதால் பாஜக அரசு வழங்காது – பிரதமர் மோடிக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் புகழாரம்..!

நான் முஸ்லிம் என்பதால் பாஜக அரசு வழங்காது – பிரதமர் மோடிக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் புகழாரம்..!

நான் முஸ்லிம் என்பதால் பத்ம விருதுகளை பாஜக அரசு வழங்காது என நினைத்ததை தவறு என நிரூபித்துவிட்டார் பிரதமர் மோடி’ என பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் ரஷித் அகமது காத்ரி புகழ்ந்து பேசியுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பிட்ரி கைவினை கலைஞரான ரஷித் அகமது காத்ரி, பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார். விருது பெறும் விழா நிறைவு பெற்றதும், விருதாளர்களுடன் பிரதமர் மோடி சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விருது பெற்றவர்களை சந்தித்தார்.

அப்போது, பிரதமருடன் கைகளைக் குலுக்கிய ரஷித் அகமது காத்ரி கூறியதாவது: எனக்கு பத்ம விருது கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இருந்தது.

ஆனால், எனக்கு காங்கிரஸ் ஆட்சியில் விருது கிடைக்கவில்லை. இதற்காக 10 ஆண்டுகள் முயற்சி செய்தேன். உங்கள் ஆட்சி (பாஜக ஆட்சி) வந்ததும், எனக்கு எந்த விருதையும் வழங்காது என எண்ணினேன். அதாவது பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்த விருதையும் வழங்காது என நினைத்தேன். ஆனால், நான் நினைத்தது தவறு என நீங்கள் (பிரதமர் மோடி) நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இதனைக் கேட்ட பிரதமர் மோடி, புன்னகையுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.

Leave your comments here...