ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு 17 நவீன ஆழ்கடல் கப்பல்கள் – ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்..!

இந்தியா

ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு 17 நவீன ஆழ்கடல் கப்பல்கள் – ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்..!

ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு  17 நவீன ஆழ்கடல் கப்பல்கள் – ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்..!

இந்தியக் கப்பற்படைக்கு 11 நவீன கடலோர ரோந்து வாகனங்கள், 6 நவீன ஏவுகணை வாகனங்கள் வாங்குவதற்கு இந்திய கப்பல் கட்டும் தளங்களுடன் ரூ.19,600 கோடிக்கான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் 2023, மார்ச் 30 அன்று கையெழுத்திட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சக ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது; “இது கப்பற்படையை வலுப்படுத்தும் மற்றும் தற்சார்பு என்ற நமது நோக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும்.”

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை வலப்படுத்தும் நடவடிக்கையாக, 11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை தாங்கி கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.19,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் மார்ச் 30 கையெழுத்திட்டுள்ளது.

11 அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்து கப்பல்களை வாங்க கோவா கப்பல் கட்டும் நிறுவனம் (ஜிஎஸ்எல்) மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டும் (ஜிஆர்எஸ்இ) நிறுவனங்களுடன் ரூ. 9,781கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த 11 கப்பல்களில் 7 கப்பல்கள் ஜிஎஸ்எல் நிறுவனத்தின் மூலமாகவும், 4 கப்பல்கள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தின் மூலமாகவும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த கப்பல்கள் 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல்களை (என்ஜிஎம்இ) வடிவமைக்க கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (சிஎஸ்எல்) ரூ. 9,805 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கப்பல்கள் 2027 மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல்கள் அதிக ஆயுதங்களுடன் அதி வேகத்தில் தாக்குதல்களை நடத்த முடியும். எதிரிகளின் கப்பல்களையும், குறிப்பிட்ட இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன்படைத்தவையாக இவை திகழும்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் இந்த கப்பல்களுக்குத் தேவையான பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்படும். இதன் மூலம் இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்களும், துணை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இத்துறையில் பங்கேற்று பெரிதும் பயனடையும். தற்சார்பு இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக இவை பெருமையுடன் திகழும்.

Leave your comments here...