தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமல்..!

தமிழகம்

தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமல்..!

தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமல்..!

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நாளை (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது
அதன்படி, ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது. சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும். இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன;-.

புதிய கட்டண உயர்வுப்படி சென்னை அக்கரை-மாமல்லபுரம் இடையே கார், ஜீப், வேன் ஆகியவை ஒருமுறை பயணம் செய்ய ரூ.47 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வாகனங்கள் சென்று திரும்ப ரூ.70 கட்டணமாகவும், ஒரே நாளில் பலமுறை பயணம் செய்ய ரூ.128 கட்டணமாகவும், மாதாந்திர கட்டணம் ரூ.2,721 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலகு ரக வாகனம் மற்றும் சிற்றுந்துகள் இந்த வழியாக ஒரு முறை பயணம் செய்ய ரூ.75, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.113 கடட்ணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பேருந்துகளுக்கு ஒரு முறை கட்டணம் ரூ.157 ஆகவும், சென்று திரும் ரூ.236ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வாகனங்களை பொறுத்த அளவில், ஒரு முறை பயணம் செய்ய ரூ.172ம், சென்று திரும்ப ரூ.258ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே 4-4 சக்கர கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூ.247 மற்றும் ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.370 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் சக்கரங்கள் கொண்ட அதி கனரக கட்டுமான வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.301, சென்று திரும்ப ரூ.451 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளூர் கார்களுக்கு சுங்க சாவடியை கடக்க மாத கட்டணம் ரூ.240 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பேருந்துகள் எனில் ரூ.1900 செலுத்த வேண்டும்.

Leave your comments here...