இந்தியா ஜனநாயகத்தின் தாயாக உள்ளது – பிரதமர் மோடி

இந்தியா

இந்தியா ஜனநாயகத்தின் தாயாக உள்ளது – பிரதமர் மோடி

இந்தியா ஜனநாயகத்தின் தாயாக உள்ளது  – பிரதமர்  மோடி

இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பல சவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இருப்பது என்பது, ஜனநாயகத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிககோ, ஜாம்பியா அதிபர் ஹகைன்டே ஹிசிலிமா, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே மற்றும் தென் கொரிய அதிபர் யுன் சக் இணைந்து நடத்திய ஜனநாயகம் தொடர்பான மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினர்

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இது ஜனநாயகத்திற்கும், உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஜனநாயகத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது.தங்களது தலைவரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது, உலக நாடுகளில் வருவதற்கு முன்னரே, பழங்கால இந்தியாவில் வழக்கத்தில் இருந்துள்ளது. மகாபாரதத்தின்படி, குடிமகனின் முதல்கடமை, தங்களது தலைவரை தேர்வு செய்வது எனக்கூறப்பட்டு உள்ளது. அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி நமது புனித வேதங்கள் பேசுகின்றன. இந்தியா உண்மையில் ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகம் என்பது கட்டமைப்பு அல்ல. அது இந்தியாவிற்கு ஆன்மாவாகவும் உள்ளது. ஒவ்வொரு மனிதனின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் அனைத்தும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது.

வாழ்க்கை முறை மாற்றம் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, சேமிப்பு மூலம் தண்ணீரை பாதுகாப்பது, அனைவருக்கும் சுத்தமான சமையல் எரிவாயு வழங்குவது என அனைத்து நடவடிக்கைகளும், மக்களின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக மேற்கொள்ளப்படுகிறது.கோவிட் காலகட்டத்தில் இந்தியாவின் கடமைகளானது மக்களால் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் தடுப்பூசி கொள்கையும், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம் ‘ என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave your comments here...