பெண்களுக்கு பாலியல் தொந்தரவு – பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ரசிகர்மன்றம் வைத்த இளைஞர்கள்..!

தமிழகம்

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு – பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ரசிகர்மன்றம் வைத்த இளைஞர்கள்..!

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு – பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ரசிகர்மன்றம் வைத்த இளைஞர்கள்..!

குமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்த சூழால் அருகில் உள்ள குடையால்விளை பாத்திமாநகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்தநிலையில் இவர் இளம்பெண்களுடன் நெருக்கம், ஆபாசமான வாட்ஸ்-அப் சாட்டிங், வீடியோ காலில் பதிவான நிர்வாண காட்சிகள் போன்றவை சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும், பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்ததாக பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த போது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு கோர்ட்டு உத்தரவின்பேரில் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாவ மன்னிப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பங்கு தந்தை பெனடிக் ஆன்றோ பெயரில் ரசிகர் மன்றம் உருவாக்கி திருமண வாழ்த்து பேனர் அடித்த குமரி இளைஞர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீம்ஸ்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்குதந்தை பெனடிக் ஆன்றோ பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி வடிவேலு, சந்தானம் பட காமெடிகளை திருமண வாழ்த்து பேனரில் வைத்து வீட்டின் முன்பு வைத்துள்ளனர். இதனை திருமண வீட்டிற்கு வரும் மக்கள் வித்தியாசமான முறையில் பார்த்து செல்கின்றனர். தற்போது இது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Leave your comments here...