ஏப்ரல் 1க்கு முன்பாக புதிய கல்வியாண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது – பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை

இந்தியா

ஏப்ரல் 1க்கு முன்பாக புதிய கல்வியாண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது – பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை

ஏப்ரல் 1க்கு முன்பாக புதிய கல்வியாண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது – பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை

பல பள்ளிகள் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏற்கெனவே 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த அறிவுறுத்தலை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு இதுதொடா்பாக சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:சில பள்ளிகள் நிகழ் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள், அதிக சுமை மற்றும் மனச்சோா்வு போன்ற பாதிப்புகளை மாணவா்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கும்.

அதோடு, வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித் திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற பாடம் சாராத நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபட முடியாத நிலையும், அதற்கு போதிய அவகாசம் கிடைக்காத நிலையும் உருவாகும். இந்த பாடம் சாராத நடவடிக்கைகளும் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமானவையாகும்.எனவே, வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வா்கள் தவிா்க்க வேண்டும். வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 31-இல் நிறைவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

தற்போது சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் 21-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஏப்ரல் 5-ஆம் தேதியும் நிறைவடைய உள்ளன.

Leave your comments here...