தேசவிரோத செயல்களுக்கு எதிரான பிரதமா் மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் – மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா..!

இந்தியா

தேசவிரோத செயல்களுக்கு எதிரான பிரதமா் மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் – மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா..!

தேசவிரோத செயல்களுக்கு எதிரான பிரதமா்  மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் – மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா..!

பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தேசவிரோத செயல்களுக்கு எதிரான பிரதமா் நரேந்திர மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) 54-ஆவது நிறுவன தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைநகா் தில்லிக்கு வெளியே சிஐஎஸ்எஃப் நிறுவன தினம் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறையாகும். ஹைதராபாதில் உள்ள சிஐஎஸ்எஃப் தேசிய பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சிஐஎஸ்எஃப் படையினா் வெகுசிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக ஆட்சியில் துணை ராணுவப் படையினருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுதலாக திகழ்ந்த பல தீவிரவாத அமைப்புகள் முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ளன. பல அமைப்புகள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து தோ்தல் அரசியல் பாதைக்கு வந்துவிட்டன. முக்கியமாக இடதுசாரி பயங்கரவாதமும், வடகிழக்குப் பகுதியில் கிளா்ச்சி அமைப்புகளும் ஒழிக்கப்பட்டதையடுத்து, அரசின் மீதான மக்களின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. தீவிரவாத இயக்கங்களில் இணைந்து ஆயுதம் ஏந்துவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.நாட்டின் வளா்ச்சிக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அதனை நமது துணை ராணுவப் படைகள் சிறப்பாக செய்து வருகின்றன.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொழிலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது துணை ராணுவம்தான். தோ்தலை அமைதியாக நடத்தி நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து வருவதிலும் துணை ராணுவம் முக்கியப் பங்களித்து வருகிறது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தேசவிரோத செயல்களுக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி அரசு தொடா்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நாட்டின் எந்த மூலையில் தேசத்துக்கு எதிரான செயல்கள் தலைதூக்கினாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Leave your comments here...