எனக்கு கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது – பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

இந்தியா

எனக்கு கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது – பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

எனக்கு கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது – பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

நான் நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறேன். ஆனால், என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் தாண்டியா மாவட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த சில நாட்களாகபெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. நமது நாட்டின் வளர்ச்சியை கண்டு பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். அனைத்து திட்டங்களும், வளர்ச்சி மற்றும் செழுமையை கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களும் திறந்து வைக்கப்படுகின்றன.

கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மைசூரு முக்கியமான நகரங்கள். ஒரு நகரம் தொழில்நுட்பத்திற்கும், மற்றொரு நகரம் பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. இரு நகரங்களையும் தொழில்நுட்பங்கள் மூலம் இணைப்பது முக்கியமானது. ஏழை மக்களை அழிப்பதற்கு கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் காங்கிரஸ் விடவில்லை. ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொள்ளையடித்தார்.கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 9 கோடி வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அதில் லட்சக்கணக்கான வீடுகள் கர்நாடகா மக்கள் பயனடைந்தனர். ஜல்ஜீவன் திட்டத்தில் 40 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் சாதனை படைக்கத்தக்க வகையில் முதலீடு செய்யப்பட்டது. அதில், கர்நாடகா தான் அதிகம் பயனடைந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி கர்நாடகாவில் 4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது.ஏழை மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை உருவாக்குவதில், நான் முனைப்புடன் செயல்படுகிறேன். ஆனால் காங்கிரசோ எனக்கு கல்லறை தோண்டுவதில் மும்முரமாக உள்ளது. ஆனால், என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது . அதனை பற்றியே சிந்திக்கிறது.

அதே நேரத்தில் இந்திய மக்களின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. 2014க்கு முன்,2014 முன்பு மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு ஏழை மக்களை அழிக்க எந்தக் கல்லையும் விட்டு வைக்கவில்லை. ஏழை மக்களுக்கான பணத்தை காங்கிரஸ் அரசு கொள்ளையடித்தது.இவ்வாறு மோடி பேசினார்.

Leave your comments here...