நாசா-இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைகோள் இந்தியாவிடம் ஒப்படைப்பு..!

இந்தியாஉலகம்

நாசா-இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைகோள் இந்தியாவிடம் ஒப்படைப்பு..!

நாசா-இஸ்ரோ இணைந்து உருவாக்கிய  நிசார் செயற்கைகோள் இந்தியாவிடம் ஒப்படைப்பு..!

நாசா-இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கை கோளை அமெரிக்கா விமான படையினர் நேற்று இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா மற்றும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்து (நாசா-இஸ்ரோ சிந்தடிக் அமெர்ச்சர் ரேடார்)நிசார் என்ற செயற்கைகோளை உருவாக்கி உள்ளன.

இந்த செயற்கை கோளானது அமெரிக்க விமானப்படையின் சி-17 விமானம் மூலமாக பெங்களூருவில் நேற்று தரையிறங்கியதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2024ம் ஆண்டு ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாய படமிடல் செயல்பாடு மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நிசார் செயற்கைகோளை இஸ்ரோ பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

Leave your comments here...