சிந்தனையே கூடாது : அரசு போக்குவரத்து கழகங்களில் தனியாரை அனுமதிக்க கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகம்

சிந்தனையே கூடாது : அரசு போக்குவரத்து கழகங்களில் தனியாரை அனுமதிக்க கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சிந்தனையே கூடாது : அரசு போக்குவரத்து கழகங்களில் தனியாரை அனுமதிக்க கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படக் கூடாது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 1.000 தனியார் பஸ்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்தி பொதுமக்கள் மத்தியிலும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியிலும் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தனியார் பஸ்கள் இயக்கப்படாது என்று எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. மாறாக, இப்போதே தனியார் பஸ்கள் இயக்கப்படாது. அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்காகவே ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருக்கிறது.

அதன் அறிக்கையை ஆய்வு செய்த பிறகே தனியார் பஸ்களை இயக்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என விளக்கம் அளித்திருக்கிறார். மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டாலும், அதனால் இலவச பயணச் சலுகை ரத்து செய்யப்படாது என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம் சென்னையில் தனியார் பஸ்கள் இயக்கப்படவிருப்பதை தம்மையும் அறியாமல் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் எந்த வகையிலும் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். தனியார்மயத்தை பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். மாநகர பஸ்களின் எண்ணிக்கையை இப்போதுள்ள 3,453-ல் இருந்து படிப்படியாக 7 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அனைத்து பஸ்களையும் இலவசமாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...