அடினோ வைரஸ் – குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம்..!

இந்தியா

அடினோ வைரஸ் – குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம்..!

அடினோ வைரஸ் – குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம்..!

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில், ‘அடினோ வைரஸ்’ அதிகமாகப் பரவி வருவதை அடுத்து, குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் தீவிர காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.இதையடுத்து, அவர்களில் உடலில் இருந்த வைரஸ்களின் மாதிரியை சோதனை செய்ததில், இவர்கள் அடினோ என்ற வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அடினோ வைரஸ் அறிகுறிகள் பிறந்த மற்றும் சிறு வயது குழந்தைகளின் சுவாசக் குழாயில் கடுமையான பாதிப்புகளை அடினோ வைரஸ் ஏற்படுத்தும். தொடர் காய்ச்சல், சளி, தொண்டை புண், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், அது, அடினோ வைரஸ் பாதிப்பாகும் என, ஐக்கிய நாடுகள் சபை நோய் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை அடினோ வைரஸ் எளிதில் தாக்கும் என்பதால், மேற்கு வங்க மாநிலம் முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதையடுத்து மாநிலம் முழுதும் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உஷார் படுத்தப்பட்டன.கடந்த சில நாட்களாக அடினோ வைரசால் ஏற்படும் நோய்த் தொற்று அதிகரித்து, இதுவரை 19 குழந்தைகள் உயிரிழந்துஉள்ளன.இவர்களில், 13 பேர் இணைநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் குழந்தைகள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ”புதிய வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம்.”தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இருமல் மற்றும் சளி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்,” என, தெரிவித்துள்ளார்.

Leave your comments here...