டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

உலகம்

டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம்  – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனாவை சேர்ந்த பிரபல டிக்-டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசின் மின்னணு சாதனங்களிலும் டிக்-டாக் செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் இந்த செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை முழுமையாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மசோதாவுக்கு அமெரிக்கா பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் டிக்-டாக் செயலியை தடை செய்வதற்கான முழு அதிகாரம் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

Leave your comments here...